கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: தனபால் ரமேஷின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: தனபால் ரமேஷின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கு: தனபால் ரமேஷின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிப்பு
Published on

கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கில் கைது செய்யபட்டு கூடலூர் கிளை சிறையில் உள்ள தனபால் மற்றும் ரமேஷின் நீதிமன்ற காவல் மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே வழங்கபட்டுள்ள நீதிமன்ற காவல் இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் காணொளி காட்சி மூலம் நீதிமன்ற காவல் பிப்ரவரி 2 தேதி வரை நீட்டித்து உதகையில் உள்ள மாவட்ட மகளிர் நீதிபதி அருணாச்சலம் உத்தரவிட்டுள்ளார்.

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் முக்கிய சாட்சிகளாக உள்ள முன்னால் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுனர் கனகராஜின் சகோதரர் தனபால் மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோர் கடந்த அக்டோபர் மாதம் சேலத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

பின்னர் இருவரும் கூடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்கள் ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர், இந்நிலையில் நீதிமன்ற காவல் முடிந்து இன்று உதகை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தவிருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக காணொளி மூலமாக சிறையில் உள்ள தனபால் மற்றும் ரமேஷிடம் விசாரணை நடைபெற்றது

இதையடுத்து இவர்கள் இருவருக்கும் பிப்ரவரி 2 ஆம் தேதி வரை காவலை நீடித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com