\
கொள்ளையடிக்கவே கோடநாடு காவலாளி கொலை - எஸ்பி முரளி ரம்பா

கொள்ளையடிக்கவே கோடநாடு காவலாளி கொலை - எஸ்பி முரளி ரம்பா

கொள்ளையடிக்கவே கோடநாடு காவலாளி கொலை - எஸ்பி முரளி ரம்பா
Published on

கோடநாடு எஸ்டேட்டில் பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே காவலாளியை திட்டமிட்டு கொலை செய்திருப்பதாக நீலகிரி காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா தெரிவித்தார்.

கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் முக்கிய குற்றாவாளியான சயனிடம், 3 மணி நேரமாக அவர் விசாரணை நடத்தினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய முரளிரம்பா , இந்த வழக்கில் 11 பேர் குற்றவாளிகள் எனவும், பணத்தை கொள்ளையடிப்பதற்காகவே காவலாளி ஓம்பகதூரை கொலை செய்துள்ளார்கள் என்றும் தெரிவித்தர். இந்த சம்பவத்திற்கான வேறு காரணங்கள் அல்லது வேறு யாருக்கேனும் அதில் தொடர்பு உள்ளதா என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் முரளிரம்பா தெரிவித்தார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com