\
கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை

கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை

கொடநாடு எஸ்டேட் ஊழியர் தற்கொலை
Published on

கொடநாடு எஸ்டேட்டில் பணி புரிந்து வந்த தினேஷ் குமார் என்ற இளைஞர் தற்கொலை செய்துகொண்டு உயிரிழந்துள்ளார். 

கொடநாடு அருகே உள்ள தென்கரை கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் குமார் கொடநாடு எஸ்டேட்டில் கம்யூட்டர் ஆப்ரேட்டராக பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், கண்ணில் ஏற்பட்ட நோய் தொற்று காரணமாக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த ஒருவாரமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். கடந்த சில நாட்களாக மன உலைச்சலில் அவர் இருந்ததாக கூறப்படுகிறது. சிகிச்சைக்காக மருத்துவமனை சென்று வந்த அவர், மன உலைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த தற்கொலை சம்பவம் குறித்து சோலூர்மட்டம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com