கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு

கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு
Published on

கொடைக்கானலில் விளையும் மலைப்பூண்டுக்கு புவிசார்குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 

கொடைக்கானலில் செயல்பட்டு வரும் அன்னை தெரசா மகளிர் பல்கலைகழகம் மற்றும் தமிழக அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை சார்பில் கடந்த 2018 ஆம் ஆண்டு மருத்துவக்குணம் கொண்ட கொடைக்கானல் மலைப்பூண்டுக்கு புவிசார் குறியீடு கோரி மத்திய அரசுக்கு விண்ணப்பித்திருந்தன. 

இந்த விண்ணப்பத்தை ஆராய்ச்சி செய்த மத்திய அரசு, தற்போது மலைப்பூண்டின் மகத்துவத்தை தெரிவிக்கும் வகையில் புவிசார் குறியீடு வழங்கி இருக்கிறது. இதன்மூலம் மகராஷ்டிரா, கர்நாட காவுக்கு அடுத்தப்படியாக, அதிக புவிசார் குறியீடு பெற்ற மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com