தமிழ்நாடு
கொடைக்கானல் மேக மூட்டமும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும்
கொடைக்கானல் மேக மூட்டமும் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும்
கொடைக்கானலில் குளிருடன் கூடிய தொடர் சாரல் மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில், கடும் குளிருடன் கூடிய தொடர் சாரல்மழை பெய்தது. தென் தமிழகத்தின் மதுரை மற்றும் தேனி மாவட்டத்திலும் மழை பெய்ததால் காற்று மாசு முற்றிலும் நீங்கி, கொடைக்கானலின் கோக்கர்ஸ் நடைபகுதியில் இருந்து, வருசநாடு, வைகை அணை, பெரியகுளம் உள்ளிட்ட சமவெளி பகுதிகளை, தொலை நோக்கிகள் இல்லாமல் வெறும் கண்களால் பார்க்க முடிந்தது. இந்த காட்சியை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு களித்தனர்.