வளைய சூரிய கிரகணத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு - கொடைக்கானல் நகராட்சி அறிவிப்பு

வளைய சூரிய கிரகணத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு - கொடைக்கானல் நகராட்சி அறிவிப்பு

வளைய சூரிய கிரகணத்தை இலவசமாக பார்க்க ஏற்பாடு - கொடைக்கானல் நகராட்சி அறிவிப்பு
Published on

தென் தமிழகத்தில் நாளை நிகழவிருக்கும் வளைய சூரிய கிரகணத்தை, கொடைக்கானல் கோக்கர்ஸ் வாக் சுற்றுலா தலத்தில் இருந்து இலவசமாக பார்க்கலாம் என நகராட்சி அறிவித்துள்ளது.

தென் தமிழக மாவட்டங்களில் நாளை நிகழவிருக்கும் வானியல் அதிசயமான, வளைய சூரிய கிரகணத்தை கொடைக்கானலில் இருந்து காண, வான் இயற்பியல் மையம் மற்றும் நகராட்சி இணைந்து பல்வேறு ஏற்பாடுகள் செய்துள்ளன. அதில் ஒரு பகுதியாக, பிரபல சுற்றுலா தலமான கோக்கர்ஸ் வாக் பகுதியில் இருந்து சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கிரகணத்தை காண்பதற்கு அனுமதி இலவசம் என நகராட்சி அறிவித்துள்ளது.

காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இலவசமாக காணலாம் என்றும், சுற்றுலா தளத்தின் டிக்கெட் வாங்கும் இடத்தில், சூரியக் கண்ணாடிகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் நகராட்சி ஆணையர் நாராயணன் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com