உயிரை பணயம் வைத்து இருவரின் உயிரை காப்பாற்றிய கொடைக்கானல் அஞ்சுவீடு கிராமத்தைச் சேர்ந்த மாரிமுத்து என்பவரை கோட்டாட்சியர் பாராட்டினார்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே பாரதி அண்ணாநகர் பகுதியில் உள்ள ஓராவி அருவியில் 3 பேர் தவறி விழுந்து உயிருக்கு போராடியுள்ளனர். இதைக்கண்ட அப்பகுதியைச் சேர்ந்த மாரிமுத்து என்பவர் தனது உயிரை பணயம்; தவறி விழுந்து தத்தளித்த மூவரில் இருவரை காப்பாற்றியுள்ளார்.
இந்நிலையில், மாரிமுத்து, அவருடன் சேர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட அப்பகுதி மக்கள் மற்றும் தீயணைப்புத் துறை வீரர்களுக்கும் கோட்டாட்சியர் முருகேசன் பொன்னாடை போர்த்தி பாராட்டினார். கோட்டாட்சியரின் இந்த செயல் உதவ முன்வருவோருக்கு உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.