மாட்டுத் தொழுவமான தானியக் கிடங்கு: பொதுமக்கள் குமுறல்

மாட்டுத் தொழுவமான தானியக் கிடங்கு: பொதுமக்கள் குமுறல்

மாட்டுத் தொழுவமான தானியக் கிடங்கு: பொதுமக்கள் குமுறல்
Published on

கொடைக்கானலில் 2004ஆம் ஆண்டு கட்டப்பட்ட தானியக் கிடங்கு பயன்படுத்தப்படாமல் மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை கிராமமான பூலத்தூரில் தானிய அரசு கிடங்கு உள்ளது. கடந்த 2004 ஆம் ஆண்டு சுமார் 5 லட்சம் செலவில் இந்த கிடங்கு கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால் உரிய பராமரிப்பு இல்லாததாலும், பயன்படுத்தாத காரணத்திணாலும் இக்கிடங்கு சிதிலமடைந்து மாட்டுத்தொழுவமாக மாறியுள்ளதாகவும் அந்த பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அத்துடன் இந்த கிடங்கை சமுதாயக்கூடமாக மாற்றி, மக்களின் பயன்பாட்டுக்கு திறக்கவும் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் பட்டுராஜனிடம் கேட்டபொழுது, கிடங்கை சீரமைக்க அரசிடம் அனுமதி கேட்டுள்ளதாகவும், விரைவில் அது சீரமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com