கொடைக்கானல் சிறுமி மரணம் - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

கொடைக்கானல் சிறுமி மரணம் - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
கொடைக்கானல் சிறுமி மரணம் - வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் பாச்சலூரில் 5-ஆம் வகுப்பு சிறுமி பள்ளி அருகே உயிரிழந்த சம்பவம் குறித்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ்மலை பாச்சலூர் கிராமத்தில் பள்ளி சிறுமியொருவர், மர்மமான முறையில் எரிந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி பெற்றோர்களால் கண்டுபிடிக்கப்பட்டார். அந்தச் சம்பவத்தில் நடைபெற்ற குற்றத்தையும் குற்றவாளிகளையும், ஏழு நாட்களை கடந்து விசாரணை செய்தும் காவல்துறையால் கண்டறிய முடியாமல் திணறி வருகிறது. உடல் உள்ளுறுப்பு மற்றும் ரத்த மாதிரிகள் வேதியியல் பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிகழ்விடத்தில் சேகரிக்கப்பட்ட முடி, துணிகள் தடயவியல் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக மரணம் என்ற அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

சிறுமியின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், மர்மமான முறையில் இறந்த சிறுமியின் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி டிஜிபி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து அடுத்தகட்டமாக சிபிசிஐடி போலீசார் பாண்டிகுடி காவல்நிலையத்திலிருந்து வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் பெற்று விசாரணையை தொடங்கவிருக்கின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com