கோடையில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் பயணமா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

கோடையில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் பயணமா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!

கோடையில் இருந்து தப்பிக்க கொடைக்கானல் பயணமா? இதை மிஸ் பண்ணிடாதீங்க!
Published on

கொடைக்கானலில் தொடந்து பெய்யும் கோடை மழை காரணமாக அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

கோடை மழைக்கால குளு குளு கால நிலையை அனுபவிக்க கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். இதனால் மூஞ்சிக்கல் முதல் ஏரிப்பாலம் வரையிலும், ஏரிப்பாலத்தில் இருந்து வான் இயற்பியல் ஆய்வகம் வழியாக சுற்றுலா தலங்களுக்குச் சென்று, திரும்பும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து நிற்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கொடைக்கானலில் தொடர்ந்து பெய்துவரும் கோடை மழை காரணமாக நீரோடைகள் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதையடுத்து சுற்றுலா பயணிகள் எளிதில் செல்லக்கூடிய வெள்ளி அருவி, பாம்பாறு நீர்வீழ்ச்சிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து ரம்யமாக காட்சியளிக்கிறது. இதைத் தொடர்ந்து ஆர்ப்பரித்துக் கொட்டும் நீர்வீழ்ச்சிகளை பார்த்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com