2022-23 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி தாக்கல் செய்யப்போறீங்களா? இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க!

2022-23 ஆம் நிதியாண்டுக்கான வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள். இந்நாளில் காலம் தாழ்த்தி வருமானவரி தாக்கல் செய்தால் எவ்வளவு அபராதம்? வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது கவனிக்க வேண்டியவை என்னென்ன என்பதை விரிவாக பார்க்கலாம்.

2022-23 ஆம் நிதியாண்டில் பெற்ற வருமானத்திற்கு மதிப்பீடு செய்யப்பட்டு, நடப்பு நிதியாண்டில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய இன்றுடன் கால அவகாசம் முடிவடைகிறது. நாளை முதல் தாக்கல் செய்பவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

income tax
income taxpt desk

வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள், அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளமான www.incometax.gov.in என்ற இணையதளத்தில, அவரவர் பான் எண் மற்றும் கடவுச் சொல்லை பயன்படுத்தி உள் சென்று வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். புதியமுறை அல்லது பழைய முறையில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யமுடியும்.

புதிய முறையில் ஆண்டு வருமானம் 7 லட்சம் ரூபாய் வரை உள்ளவர்களுக்கு வரி கிடையாது. புதிய முறையில் வருமானவரி கணக்கு தாக்கல் செய்யும்போது, சேமிப்பு, முதலீடுகளுக்கு வரிவிலக்கு கிடையாது. அதேநேரம், சேமிப்பு மற்றும் முதலீடு தொடர்பான ஆவணங்களை சமர்ப்பித்து வரிவிலக்கு பெற பழைய முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

முன்கூட்டியே கூடுதலாக வரி பிடிக்கப்பட்டவர்கள், ரீஃபண்ட் பெறவேண்டும் என்றால் சரியான முறையில் காலக் கெடுவுக்குள் வருமானவரி கணக்கு தாக்கல் செய்திருக்க வேண்டும். வரி கணக்கு தாக்கல் செய்து சரிபார்த்த பிறகு, அதிகபட்சமாக 20 முதல் 25 நாட்களில் ரீஃபண்ட்-ஐ பெறமுடியும். வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியவர்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் கட்டாயம் இணைத்திருக்க வேண்டும்.

income tax
income taxpt desk

அப்போதுதான் ரீஃபண்ட் தொகை இருப்பினும் சரியாக கிடைக்கும். பான் எண்ணை ஆதாருடன் இணைக்க வழங்கப்பட்ட கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் முடிந்து விட்டது. எனவே, வருமானவரித் துறையின் இணையதளத்தில், QUICK LINK பிரிவில்  LINK AADHAAR என்பதை கிளிக் செய்து ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்தி பான் எண்ணை ஆதாருடன் இணைத்துக் கொள்ள முடியும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com