அடக்குமுறை வெறியாட்டத்துக்கு பலியான 44 உயிர்கள்... இன்று கீழவெண்மணி நினைவுதினம்..!

அடக்குமுறை வெறியாட்டத்துக்கு பலியான 44 உயிர்கள்... இன்று கீழவெண்மணி நினைவுதினம்..!

அடக்குமுறை வெறியாட்டத்துக்கு பலியான 44 உயிர்கள்... இன்று கீழவெண்மணி நினைவுதினம்..!
Published on

கீழவெண்மணியில் அடக்குமுறை வெறியாட்டத்துக்கு 44 பேரை பலி கொடுத்த தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. அரைப்படி நெல் கூலியை உயர்த்திக் கேட்டுப் போராடிய விவசாய கூலிகள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்திருந்தாலும், அதன் சுவடுகள் இன்னமும் அழியாமல் இருக்கின்றன.

நாகை நெற்களஞ்சியமான ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்டம் நிலச்சுவான்தார்கள் கட்டுப்பாட்டில் இருந்த காலக்கட்டம் அது. நிலத்தில் வியர்வை சிந்தி உழைத்த விவசாய தொழிலாளர்கள், அதற்கு கூலியாக நெல்லை பெற்றுச் செல்லும் நடைமுறை இருந்தது. அரைப்படி நெல்லை கூடுதலாக உயர்த்தி வழங்கக் கேட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் மீது அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டது. அதற்கு அஞ்சி கூரை வீடு ஒன்றில் தஞ்சமடைந்த 20 பெண்கள், 19 குழந்தைகள் உள்பட 44 பேர் உயிரோடு தீயிட்டுக் கொல்லப்பட்டனர்.

1968-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் நாள் நடந்த இந்த கோர சம்பவம் எளிதில் மறக்க முடியாதவை. நிலச்சுவான்தார்களின் அடியாட்கள், போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தினர். கீழ வெண்மணியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல் தொடர்பான வழக்குகளில் நிலச் சுவான்தாரர்களுக்கு சாதகமாகவே தீர்ப்பு வெளியானதாகக் கூறும் தொழிலாளர்கள், தற்போது வரை எவ்வித உதவியும் கிடைக்கவில்லை என்று பாதிக்கப்பட்டவர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர்.

கீழ வெண்மணியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் உயிரிழந்தோருக்கு அங்கு நினைவுத்தூண் நிறுவப்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. தாழ்த்தப்பட்ட, விவசாய கூலித் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட அடக்குமுறையின் கோரமுகத்தை வெளிக்காட்டியபடி எவ்வித முன்னேற்றமுமின்றி எளிய கிராமமாகவே தொடர்கிறது கீழவெண்மணி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com