"WFH முறையால் கிராமங்கள் மேம்படும்!" KISSFLOW CEO சுரேஷ் சம்பந்தம் #ThulirkkumNambikkai

"WFH முறையால் கிராமங்கள் மேம்படும்!" KISSFLOW CEO சுரேஷ் சம்பந்தம் #ThulirkkumNambikkai
"WFH முறையால் கிராமங்கள் மேம்படும்!" KISSFLOW CEO சுரேஷ் சம்பந்தம் #ThulirkkumNambikkai

’’ நிரந்தரமாக ஒர்க் ஃப்ரம் ஹோம் செய்யும் பலர் கிராமப்புறங்களில் இருந்து வேலை செய்யும்போது, அவர்களின் பொருளாதாரம் மேம்படுவதோடு, கிராமங்களும் மேம்படும்; பள்ளிகள் வளர்ச்சியடையும்’’ என்று KISSFLOW CEO சுரேஷ் சம்பந்தம் கூறியுள்ளார்.

தமிழகம் கொரோனாவில் இருந்து மீண்டும் வரும் நிலையில், 'துளிர்க்கும் நம்பிக்கை' என்ற தலைப்பில் புதிய தலைமுறை மற்றும் பேஸ்புக் நிறுவனம் இணைந்து சிறப்பு நிகழ்ச்சி நடத்தியது. நிர்வாக ஆசிரியர் கார்த்திகைச் செல்வன் நெறியாள்கையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், KISSFLOW CEO சுரேஷ் சம்பந்தமிடம் பொதுமுடக்கத்திற்கு பிறகு ஐடி துறை எப்படி இருக்கிறது? கடந்த ஆண்டு இருந்த ஓபனிங்க்ஸ் தள்ளிப்போய்க்கொண்டே இருப்பதால், இந்த ஆண்டு நிலை என்னவாகும்? என்ற கேள்வி நேயர் சார்பாக முன்வைக்கப்பட்டது.

அதற்கு அவர் பதிலளித்தபோது, ‘’ஹோட்டல்கள், ட்ரான்ஸ்போர்ட், டூரிஸம் போன்ற துறைகளில் ஏற்பட்ட பாதிப்பு ஐடி துறையில் இல்லை என்றே சொல்லலாம். ஐடி துறையில் இரண்டுவிதமாக கம்பெனிகள் இருக்கின்றன. சில சாஃப்ட்வேர்கள் எல்லாத் துறைக்கும் பயன்படும். அவற்றை horizontal software கம்பெனிகள் என்று சொல்லுவோம். மற்றொன்று குறிப்பிட்ட வேலைகளுக்கு பயன்படும் vertical software கம்பெனிகள் என்று சொல்லுவோம். உதாரணத்திற்கு, சில கம்பெனிகள் ரெஸ்டாரண்டுகளுக்கு மட்டும் விற்பனை செய்யக்கூடிய சாஃப்ட்வேர்களை மட்டும் தயாரிப்பார்கள். பொதுமுடக்கத்தால் ரெஸ்டாரண்டுகள் நஷ்டத்தில் இயங்கும்போது இதுபோன்ற கம்பெனிகளும் பாதிக்கப்படும்.

Horizontal கம்பெனிகள் வேலைவாப்புகளை ஆரம்பித்துவிட்டன. அதேசமயம் அனைத்தையும் டிஜிட்டல் மயமாக்குதல் என்ற மனப்பான்மையும் வளர்ந்துள்ளது. என்னுடைய கணிப்புப்படி, 2021இல் சாஃப்ட்வேர்கள் தேவை அதிகரிக்கும்.

அதுதவிர work from home வசதியை சில நிறுவனங்கள் நிரந்தரமாக்கிவிட்டன. சில நிறுவனங்கள் குறிப்பிட்ட நாட்கள் அலுவலகம், மற்ற நாட்கள் வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்ற வசதியைக் கொடுத்துள்ளது. நிரந்தரமாக வீட்டிலிருந்து வேலை செய்யும் பலர் கிராமப்புறங்களில் இருந்து வேலை செய்யும்போது, அவர்களின் பொருளாதாரம் மேம்படுவதோடு, கிராமங்களும் மேம்படும்; பள்ளிகள் வளர்ச்சியடையும்.

பல நிறுவனங்கள் கொரோனா தொடக்கத்தில் பலரை வேலையைவிட்டு நீக்கிவிட்டனர். தற்போது அவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாகியிருக்கிறது. தற்போதுள்ள மாணவர்கள் தாங்களாகவே சொந்தமாக ஒரு நிறுவனத்தையே கூட உருவாக்கும் வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது’’ என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com