\
சென்னை: கற்பனையே செய்திராத ஒரு பரிசு கையில் கிடைத்தால்... நெகிழவைத்த கிஸ்ஃப்ளோ CEO

சென்னை: கற்பனையே செய்திராத ஒரு பரிசு கையில் கிடைத்தால்... நெகிழவைத்த கிஸ்ஃப்ளோ CEO

சென்னை: கற்பனையே செய்திராத ஒரு பரிசு கையில் கிடைத்தால்... நெகிழவைத்த கிஸ்ஃப்ளோ CEO
Published on

சிறிய அளவில் தொடங்கியக் காலம் தொட்டு உலக அளவில் புகழ்பெறும் நிறுவனமாக உயரும்வரை உடன் பயணித்தோருக்கு, எதிர்பாரா வெகுமதி தந்து வியப்படையச் செய்துள்ளார் அந்நிறுவன தலைமைச் செயல் அதிகாரி.

சென்னை கந்தன்சாவடியில் கிஸ்ஃபிளோ மென்பொருள் நிறுவனம் இயங்கி வருகிறது. இதன் தலைமைச் செயல் அதிகாரியான சுரேஷ் சம்பந்தம், தன்னுடன் பத்து ஆண்டுகள் பயணித்த பணியாளர்கள் 5 பேரை சாதாரண கொண்டாட்டம் இருக்கிறது என குடும்பத்துடன் வருமாறு அழைத்துள்ளார். ஆனால் அவர்களே எதிர்பார்க்காத வகையில் விலை உயர்ந்த சொகுசுக் காரை பரிசாக அளித்து ஒவ்வொருவர் மத்தியிலும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

கார்களை பரிசாக பெற்ற ஆதி, விவேக், கௌசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய பணியாளர்கள் தாங்கள் வானில் பறப்பதுபோன்று உணர்வதாக, உற்சாகம் தெரிவித்தனர். எதையும் எதிர்பாராது கடமையைக் கண்ணெனக் கொண்டு பணியாற்றியோருக்கு கிடைத்த பரிசு அவர்களை மட்டுமல்ல, சக ஊழியர்களுக்கும் புதிய உத்வேகத்தைத் தந்துள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com