தலைவர்கள் பற்றி அவதூறு: கிஷோர் கே சாமி கைது

தலைவர்கள் பற்றி அவதூறு: கிஷோர் கே சாமி கைது

தலைவர்கள் பற்றி அவதூறு: கிஷோர் கே சாமி கைது
Published on
மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா, கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறாக பதிவிட்டதாக கிஷோர் கே சாமி என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சமூக வலைத்தளங்களில் பிரபலமானவராக அறியப்படும் கிஷோர் கே சாமி என்பவர் மறைந்த முன்னாள் முதலமைச்சர்களான அண்ணா, கருணாநிதி மற்றும் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் பத்திரிகையாளர்கள் குறித்து ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட தளங்களில் தொடர்ந்து அவதூறாகவும் இழிவாகவும் பதிவிட்டு வந்ததாக தெரிகிறது.
இதுதொடர்பாக காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக ஐ.டி விங்க் ஒருங்கிணைப்பாளர் ரவிச்சந்திரன், சங்கர் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் கிஷோர் கே சாமி சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com