கொலை செய்துவிட்டு தப்பிக்க முயற்சி; சென்ட்ரலில் இருவர் கைது
திருப்பூர் மற்றும் கேரளாவில் நடந்த கொலையில் தொடர்புடையவர்கள் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டனர்.
ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த ஓடிசா மற்றும் பிஜூ ஹெப்ராம் ஆகியோர் திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் உள்ள குவாரி ஒன்றில் பணியாற்றி வந்தனர். கடந்த ஏப்ரல் மாதம் நான்காம் தேதி மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பிஜூ ஹெப்ராம் தலையில் கல்லைப்போட்டு கொலை செய்துவிட்டு சந்தோஷ் நாயக் தப்பியோடிவிட்டார். இரண்டு மாதங்களாக தலைமறைவாக இருந்த சந்தோஷ் நாயக் ரயிலில் ஓடிசா தப்பிச் செல்ல முயன்ற போது சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
கேரளாவில் இருந்து ஓடிசா செல்லும் ரயிலை சோதனை செய்த போது கழிவறைக்குள் பதுங்கியிருந்த சந்தோஷ் நாயக் சிக்கினார். இதே போல் கேரளா மாநிலம் மலப்புரம் மாவட்டம் ஆசாத் நகரில் தனது மனைவியை கொலை செய்துவிட்டு சொந்த ஊரான பீகாருக்கு ரயிலில் தப்பிச்செல்ல முயன்ற நௌசாத் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.