பாய்ந்து வந்த கிடாவை பக்குவமாய் முட்டி நிறுத்தி பரிசுகளை தட்டிச்சென்ற கிடாக்கள்

பாய்ந்து வந்த கிடாவை பக்குவமாய் முட்டி நிறுத்தி பரிசுகளை தட்டிச்சென்ற கிடாக்கள்
பாய்ந்து வந்த கிடாவை பக்குவமாய் முட்டி நிறுத்தி பரிசுகளை தட்டிச்சென்ற கிடாக்கள்

உசிலம்பட்டி அருகே 10 ஆண்டுகளுக்குப் பின்பு கிடா முட்டு போட்டி வெகு விமரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே சீமானுத்து கிராமத்தில் 10 ஆண்டுகளுக்குப் பின்பு மாபெரும் கிடா முட்டு போட்டி அரசு அனுமதியுடன் இன்று நடைபெற்றது. இதில், மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுமார் 50 ஜோடிகள் கிடா இந்த போட்டியில் பங்கேற்றன.

தமிழ்நாடு கிடா முட்டு போட்டியாளர் சங்கத்தின் சார்பில் நடைபெற்ற இப் போட்டியை மதுரை உயர்நீதிமன்ற கிளையின் அரசு வழக்கறிஞர் வீரக்கதிரவன் துவக்கி வைத்தார். தொடர்ந்து உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன், பாரதிய பார்வட் ப்ளாக் நிறுவனர் முருகன்ஜீ உள்ளிட்ட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் இப்போட்டியில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கொரோனா பாதுகாப்பு கருதி உள்ளூர் பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டிருந்த நிலையில், உசிலம்பட்டி பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் கலந்து கொண்டு ஆக்ரோஷத்துடன் மோதிக் கொண்ட கிடாக்களை கண்டு ரசித்தனர்.

போட்டியில் பங்கேற்று வெற்றி பெரும் கிடாக்களுக்கு பித்தளை அண்டா, சில்வர் அண்டா, பேக், கேடையம் போன்ற பல்வேறு பரிசுகளை விழா கமிட்டியினர் வழங்கினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com