தமிழ்நாடு
ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
ஈரோட்டிலும் கந்து வட்டி கொடுமை: கிட்னி விற்க நிர்பந்தம்
ஈரோட்டில் கடன் தொகையை திருப்பி செலுத்தாததால் கணவரின் சிறுநீரகத்தை விற்க கட்டாயப்படுத்துவதாக ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் சம்பூரணம் என்பவர் புகார் மனு அளித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியை சேர்ந்த நெசவுத்தொழிலாளி ரவி. கடன்தொகையை திருப்பி செலுத்தாததால் ரவியின் சிறுநீரகத்தை விற்க சிலர் முயற்சி செய்வதாக அவரது மனைவி சம்பூரணம் ஈரோடு மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்துள்ளார். இந்த மனுவில் கணவர் ரவியை சிலர் கட்டாயப்படுத்தி அழைத்து சென்றுவிட்டதாகவும், அவரை மீட்டுத் தரும்படியும் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியர் பிரபாகர் தெரிவிக்கையில், கிட்னியை எடுக்க நெசவுத் தொழிலாளியை அழைத்துச் சென்றது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கந்துவட்டி கொடுமை பற்றி 0424 - 2260211 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்றார்.

