எம்.ஜி.ஆர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு திருச்சி நீதிமன்றம் எதிரே உள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு திராவிடர் கழகத் தலைவர் வீரமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், இடஒதுக்கீடு மூலம் சமூக நீதி காத்ததுடன், சாதியில்லா சமூகம் அமைய பாடுபட்டவர், தாய்க்கழகமான திராவிடர் கழகத்தின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே ஆட்சி செய்தவர். பெரியாரின் நூற்றாண்டு விழாவை மிக சிறப்பாக கொண்டாடியவர் என எம். ஜி.ஆருக்கு புகழாரம் சூட்டினார்.
ஜல்லிக்கட்டுப் போராட்டம் நடத்தியவர்கள் கைது செய்யப்பட்டது குறித்த கேள்விக்கு, ஜல்லிக்கட்டுக்காக போராடுபவர்களை கைது செய்யும் உரிமை காவல்துறைக்கு உள்ளது. ஆனால் தடியடி நடத்தக் கூடாது என பதிலளித்தார்.
குடும்ப அரசியல் செய்வோம் என்ற சசிகலாவின் கணவர் நடராஜன் பேச்சு குறித்து நிருபர்கள் கேட்ட போது அது குறித்து கருத்து தெரிவிக்க வீரமணி மறுத்துவிட்டார்.