“கருத்துச் சுதந்திரம் கேட்போர் ஏன் இளையராஜாவின் கருத்தை எதிர்க்கின்றனர்?”- குஷ்பூ கேள்வி

“கருத்துச் சுதந்திரம் கேட்போர் ஏன் இளையராஜாவின் கருத்தை எதிர்க்கின்றனர்?”- குஷ்பூ கேள்வி
“கருத்துச் சுதந்திரம் கேட்போர் ஏன் இளையராஜாவின் கருத்தை எதிர்க்கின்றனர்?”- குஷ்பூ கேள்வி

“கருத்துச் சுதந்திரம் கேட்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்?” என நடிகை குஷ்பு கேள்வியெழுப்பியுள்ளார்.

பாஜக நிறுவன தின கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக `தூய்மை இந்தியா பணி’ திட்டத்தின்கீழ் தமிழ்நாடு முழுவதும் பாஜக சார்பில் கடந்த சில தினங்களாக சில முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது.  அப்படி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரை சீனிவாசபுரத்தில் இன்று துப்புரவு பணியாளர்களை கௌரவிக்கும் விழா நடந்தது. அந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பூ சுந்தர், மாநில பொதுச்செயலாளர் கரு.நாகராஜன், கராத்தே தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில், துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி அவர்கள் கெளரவித்தனர். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை குஷ்பூ, துப்புரவு பணியாளர்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம். அதன் ஒரு பகுதியாக இன்று தூய்மை பணியாளர்களுடன் சேர்ந்து கடற்கரையை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபடுகிறோம்” என்றார். பின்னர் இளையராஜாவின் அம்பேத்கர் - மோடி குறித்து குறித்து பேசினார் அவர். அப்போது, மத்திய அரசு கருத்து சுதந்திரம் அளிக்கவில்லை என்று குற்றச்சாட்டு தெரிவிக்கும் இடதுசாரி எதிர்க்கட்சிகள்தான், இன்று ஒன்று திரண்டு அம்பேத்கர் - மோடி குறித்த இளையராஜாவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கருத்துச் சுதந்திரம் கேட்கும் எதிர்க்கட்சிகள் ஏன் இளையராஜாவின் கருத்தை ஏற்க முடியவில்லை?” என்றார்.

தொடர்ந்து பேசிய தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மேலிட இணைப் பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழக அரசின் நிர்வாகத்தில் மாசு ஏற்பட்டுள்ளது. அதை சரியான முறையில் சரியான நேரத்தில் தமிழக மக்கள் தூய்மைப்படுத்துவார்கள். பிரதமர் மோடி கூறிய ராமேஸ்வரத்தில் அனுமானுக்கு சிலை அமைப்போம் என்ற கருத்தை தமிழக பாரதிய ஜனதா வரவேற்கிறது. அதேபோல மக்களின் எண்ணத்திற்கு மதிப்பளித்து இந்தத் திட்டத்தை தமிழக அரசும் வரவேற்க வேண்டும். அனுமன் தான் இந்த நாட்டின் பாதுகாவலன்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com