தேக்கடி தர்ம சாஸ்தா கோவில் திருவிழாவை ஒட்டி கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சி நடந்தது.
கேரள மாநிலம் தேக்கடி பெரியார் புலிகள் காப்பக வனப்பகுதியை ஓட்டியுள்ள, தேனி கொல்லம் தேசிய நெடுஞ்சாலை செல்லும் பாதை
அருகே தர்ம சாஸ்தா கோவில் உள்ளது. தேக்கடியை அடுத்த ஆதிவாசியின மக்கள் வசிக்கும் மன்னாக்குடி, ரோசாப்புக்கண்டம் மற்றும்
குமுளியை அடுத்த அட்டப்பள்ளம், கொல்லம்பட்டறை, விஸ்வநாதபுரம் பகுதியில் உள்ள தமிழக கேரள மக்கள் இணைந்து வணங்கும்
இந்த கோவிலில் ஆண்டுதோறும் திருவிழா நடந்து வருகிறது.
இந்த ஆண்டு திருவிழாவையொட்டி சாஸ்தாவிற்கு சிறப்பு பூஜைகளும் அபிஷேகங்களும் நடத்தப்பட்டன. பின்னர் பட்டாசுகள்
வெடிக்கப்பட்டு, கண்கவர் வான வேடிக்கை நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனை அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் என
அனைவரும் கண்டு ரசித்தனர்.