கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு

கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு

கேரள‌ வனப்பகுதியில் மாவோயிஸ்ட் நடமாட்டம் கண்டுபிடிப்பு
Published on

கேரள வனப்பகுதிகளில் மாவோயிஸ்ட் நடமாட்டம் உறுதி செய்யப்பட்டிருப்பதை அடுத்து, தமிழ்நாடு எல்லையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

கேரளாவின் வயநாடு அருகே கம்பமலை என்ற கிராமத்தில் 7 பேர் கொண்ட மாவோயிஸ்ட் குழு நுழைந்ததாக, அம்மாநில நக்சல் தடுப்பு அதிரடிப்படைக்கு தகவல் கிடைத்தது. மலைவாழ் மக்களை சந்தித்த மாவோயிஸ்ட்டுகள், அரசுக்கெதிரான வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகளை ஒட்டிவிட்டு சூரியமுடி மலைப்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் தெரியவந்தது.

அந்தப் பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தி வரும் கேரள நக்சல் தடுப்பு அதிரடிப்படையினர், தமிழக அதிகாரிகளையும் உஷார்படுத்தியுள்ளனர். மாவோயிஸ்ட்டுகள் வனப்பகுதியின் வழியே தமிழகத்திற்குள் நுழையக் கூடும் என்பதால், எல்லையில் உள்ள சோதனைச்சாவடிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

முள்ளி, பட்டிசாலை, மாங்கரை ஆகிய சோதனைச்சாவடிகளில் ஆயுதம் ஏந்திய காவல்துறையினர் நிறுத்தப்பட்டு, அனைத்து வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் பயணிகளின் உடைமைகள் சோதனையிடப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com