\
குடியரசுத்தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்களித்த கேரள எம்.எல்.ஏ

குடியரசுத்தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்களித்த கேரள எம்.எல்.ஏ

குடியரசுத்தலைவர் தேர்தல்: சென்னையில் வாக்களித்த கேரள எம்.எல்.ஏ
Published on

குடியரசுத்தலைவர் தேர்தலில், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் கேரள எம்.எல்.ஏ பாரக்கல் அப்துல்லா சென்னையில் வாக்களித்தார்.

கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டியாடி தொகுதி எம்.எல்.ஏ பாரக்கல் அப்துல்லா, உடல்நலக்குறைவால் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக செ‌ன்னையில் தங்கி தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே, குடியரசுத் தலைவர் தேர்தலில் சென்னையில் வாக்களிப்பதற்காக அவர் முன்கூட்டியே சிறப்பு அனுமதி பெற்றிருந்ததால் அதனடிப்படையில் இன்று வாக்களித்தார். சட்டப்பேரவைக்கு வந்த அப்துல்லாவை திமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, எஸ்.ஆர். ராஜா உள்ளிட்டோர் உடல் நலம் விசாரித்தனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com