பவானி ஆற்றின் குறுக்கே மேலும் 4 தடுப்பணைகள் கட்டும் கேரளா
பவானி ஆற்றின் குறுக்கே மேலும் நான்கு தடுப்பணைகள் கட்டும் பணிகளை கேரள அரசு தீவிரப்படுத்தியுள்ளது. மேலும், தடுப்பணையில் இருந்து உயரமான பகுதிக்கு தண்ணீர் எடுத்து செல்வதற்காக பம்ப் ஹவுசும் கட்டப்பட்டிருப்பது கொங்கு மண்டல விவசாயிகளிடையே ஸ் கட்டப்பட்டுள்ளது கொங்கு மண்டல விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்குதொடர்ச்சி மலையின் தமிழகப்பகுதியான அப்பர்பவானி என்னுமிடத்தில் உற்பத்தியாகும் பவானிநதி குறுகிய தூரத்திலேயே கேரள வனப்பகுதியினுள் நுழைந்து, கேரள காடுகள் வழியே 24கிலோமீட்டர் பயணித்து முக்காலி என்னும் கேரள கிராமத்தை வந்தடைகிறது. பின்னர் சுமார் 32 கிலோமீட்டர் தூரம் வரை அட்டபாடி வனத்தையொட்டி கடந்து செல்லும் பவானி ஆறு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் வழியே மீண்டும் தமிழகத்தினுள் நுழைந்து இங்குள்ள பில்லூர் அணையை நிரப்புகின்றது.
இந்நிலையில், கேரள வனப்பகுதியில் பவானி ஆற்றின் குறுக்கே தேக்குவட்டை, மஞ்சகண்டி ஆகிய இடங்களில் இரு தடுப்பணைகளை கட்டி முடித்துள்ள கேரள அரசு அடுத்ததாக, பாடவயல், சீரக்கடவு, சாவடியூர், சாளையூர் ஆகிய நான்கு இடங்களில் தடுப்பணைகள் கட்டும் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது.