\
கேரள அரசு பஸ் டிரைவர்கள் மோதல்: மலைப்பாதையில் தகராறு

கேரள அரசு பஸ் டிரைவர்கள் மோதல்: மலைப்பாதையில் தகராறு

கேரள அரசு பஸ் டிரைவர்கள் மோதல்: மலைப்பாதையில் தகராறு
Published on: 

தமிழக கேரள எல்லைப்பகுதியான குமுளி மலைப்பாதையில் கேரள அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர்கள் இருவர் மோதிக்கொண்டனர். 

கேரள மாநிலம் கோட்டயத்தில் இருந்து மதுரைக்கு சென்ற அரசு பேருந்தை வின்சென்ட் ராஜ் என்பவரும், கம்பத்தில் இருந்து குமுளிக்கு செல்லும் பேருந்தை ஷாஜி மோன் என்பவரும் ஓட்டி வந்துள்ளனர். குமுளி மலைப்பாதையில் பேருந்துகள் இரண்டும் மேலும், கீழும் விலகி செல்ல வேண்டிய கட்டாயத்தில், ஓட்டுனர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு பின்னர் மோதலாக மாறியுள்ளது. 
இதில் ஓட்டுனர் வின்சென்ட் ராஜை, மற்றொரு ஓட்டுனர் ஷாஜிமோன் தாக்கியதாக கூறப்படுகிறது. காயமடைந்த ஓட்டுனர் வின்சென்ட் ராஜ், குமுளி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கேரள அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுனர்களுக்குள் ஏற்பட்ட மோதல் குறித்து குமுளி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com