கேரள குண்டுவெடிப்பு எதிரொலி: எல்லைப்பகுதிகள், ரயில் நிலையங்கள்..தமிழகம் முழுவதும் தீவிர கண்காணிப்பு

கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக எல்லைமாவட்டங்களில் கண்காணிப்பு பலப்படுத்த உத்தரவு - டிஜிபி சங்கர் ஜிவால்
பலத்த பாதுகாப்பு -  டிஜிபி சங்கர் ஜிவால்
பலத்த பாதுகாப்பு - டிஜிபி சங்கர் ஜிவால் புதிய தலைமுறை

கேரளாவில் குண்டு வெடிப்பு சம்பவம் எதிரொலியாக தமிழக எல்லை மாவட்டங்களில் கண்காணிப்பு பலத்த பாதுகாப்பை தீவிரப்படுத்த டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக கோவை, தேனி, கன்னியாகுமரி,நெல்லை, தென்காசி, நீலகிரி உள்ளிட்ட மாவட்டங்களின் எல்லைகளில் சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு உஷார் படுத்தப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்பு -  டிஜிபி சங்கர் ஜிவால்
பலத்த பாதுகாப்பு - டிஜிபி சங்கர் ஜிவால் புதிய தலைமுறை

குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் இருந்து நீல நிற கார் ஒன்று வேகமாக சென்றதாக கேரள காவல்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் தப்பாமல் இருக்கும் வகையில் இரு மாநில சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

தென்காசி மாவட்டம் புளியரை சோதனைச் சாவடியில், தமிழகத்துக்கு வரும் அனைத்து வாகங்களும் பலத்த சோதனைக்கு பிறகு அனுமதிக்கப்பட்டு வருகின்றன.

நீலகிரியில் சோதனை

நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தமிழக கேரளா எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளில் மாவட்ட எஸ்பி உத்தரவின் படி கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.

நாடுகாணி, பாட்டவயல் சோலாடி, தாளூர் ஆகிய சோதனை சாவடிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளதோடு வாகன சோதனையும் தீவிர படுத்தப்பட்டிருக்கிறது.

கேரளா மாநிலத்தை ஒட்டிய கன்னியாகுமரியில் நாகர்கோவில் வடசேரி பேருந்து நிலையத்தில் மோப்பநாய் உதவியுடன் போலீசார் சோதனை.

கேரளா பேருந்துகளில் போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com