சென்னையிலுள்ள கேரள ஹோட்டலில் இந்து முன்னணியினர் தாக்குதல்

சென்னையிலுள்ள கேரள ஹோட்டலில் இந்து முன்னணியினர் தாக்குதல்

சென்னையிலுள்ள கேரள ஹோட்டலில் இந்து முன்னணியினர் தாக்குதல்

தமிழகத்தில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான ஹோட்டல் மீது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சபரிமலை விவகாரத்தில் கேரள அரசை கண்டிக்கும் விதமாக அவர்கள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்று உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து சில பெண்கள் சபரிமலைக்கு செல்ல முயன்றனர். பக்தர்களின் எதிர்ப்பு காரணமாக அவர்கள் உள்ளே நுழைய முடியாமல் திரும்பிவிட்டனர். சபரி மலையில் அனைத்து வயது பெண்களும் நுழைவதற்கு கேரள பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. அவர்கள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதனால் சபரிமலை கோயில் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில், போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

இதனிடையே பிந்து, கனக துர்கா என்ற 2 பெண்கள், போலீஸ் பாதுகாப்புடன் ஐயப்பன் கோயிலில் சாமி தரிசனம் செய்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேசிய கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், உண்மையான ஐயப்ப பக்தர்களின் உதவியுடன் எவ்வித எதிர்ப்பும் இன்றி இரண்டு பெண்களும் சாமி தரிசனம் செய்ததாக கூறினார்.

அதேமசயம் பெண்கள் சபரிமலை வந்ததை கண்டித்து இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை மாநிலம் தழுவிய முழு அடைப்பிற்கு சபரிமலை கர்ம சமிதி உட்பட பல்வேறு அமைப்புகள் ஏற்கனெவே அழைப்பு விடுத்திருந்தன. அதன்படி இன்று காலை முழு அடைப்பு தொடங்கியது. கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் போராட்டக்காரர்கள் வாகனங்களை மறித்தனர். சாலையில் டயர்களை எரித்தனர். இதுதொடர்பான கலவரத்தில் 6 பேர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் உள்ள கேரள அரசுக்கு சொந்தமான ஹோட்டல் மீது இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் கேரள அரசுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று உள்ளது. இந்த ஹோட்டலுக்கு இன்று காலை வந்த 8 பேர் முதல் 10 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலின் ஜன்னல் கதவுகளை உடைத்துள்ளனர். இந்தச் சம்பவம் தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்தவர்கள் என போலீசார் கூறுகின்றனர்.

சென்னையில் கேளர அரசுக்கு சொந்தமான ஹோட்டல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கேரள அரசுகளுக்கு சொந்தமான நிறுவனங்கள் உள்பட அனைத்திற்கும் போலீசார் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com