\
சென்னை: தி.நகர் பகுதியில் வசித்து வரும் நல்லக்கண்ணு வீட்டில் புகுந்த மழைநீர்

சென்னை: தி.நகர் பகுதியில் வசித்து வரும் நல்லக்கண்ணு வீட்டில் புகுந்த மழைநீர்

சென்னை: தி.நகர் பகுதியில் வசித்து வரும் நல்லக்கண்ணு வீட்டில் புகுந்த மழைநீர்
Published on

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக, சாலைகள் தொடங்கி பல பகுதிகளில் வீடுகளிலும் நீர் தேங்கியுள்ளது. மழைநீரால் மாநகர் முழுக்க பல இடங்களில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

தி.நகர் சிஐடி நகர் பகுதியில் அரசு குடியிருப்பில் வசித்து வரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லக்கண்ணு வீட்டில் மழைநீர் தேங்கியுள்ளது. போலவே மழை வெள்ளத்தில் புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் சாலைகளும் மூழ்கியுள்ளன. இதில் புரசைவாக்கத்தில் கெல்லீஸ் சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருகிறது. மழை காரணமாக அந்தப் பணிகள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.

அந்த சாலையில் மழை தண்ணீர் தேங்கி இருப்பதால் வாகன ஓட்டிகள் மிகுந்த அவதிக்குள்ளாகி உள்ளனர். வாகனங்கள் மெதுவாக நகர்ந்து நகர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.  மேலும் கெல்லீஸ் சிக்னல் பகுதியில் இருந்து கீழ்ப்பாக்கம் பால்பர் சாலை செல்லும் சாலையின் இருபுறமும் தண்ணீர் தேங்கி இருக்கிறது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com