கீழடியில் 4ஆம் கட்ட பணிகள்: மத்திய அரசு அனுமதி கேட்டு வரைவு திட்டம்
சிவகங்கை மாவட்டம் கீழடியில் 4ஆம் கட்ட பணிகள் தொடங்க அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு வரைவு திட்டம் அனுப்பபட்டுள்ளதாக தொல்லியல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் தமிழர் நாகரிகத்தை விளக்கும் வகையில், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளன. இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான நாகரிகம் என இதுவரை திராவிட நாகரிகம் கணக்கிடப்பட்டு வந்தது. இந்த ஆய்வின் மூலம் இன்னும் தொன்மையான நாகரிகம் என நிறுவப்படுவதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. இதுவரை இங்கு மூன்று கட்ட அகழாய்வு பணிகள் நடந்துள்ளன. செப்டம்பர் 30ஆம் தேதியுடன் இந்தப் பணிகள் முடிவடைகின்றன. 4ஆம் கட்ட பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி கேட்டு, மத்திய அரசுக்கு வரைவு திட்டம் அனுப்பப்பட்டுள்ளதாக தொல்லியல் கண்காணிப்பாளர் ஸ்ரீராமன் கூறியுள்ளார்.
மே 27-ம் தேதி தொடங்கப்பட்ட 3ஆம் கட்ட அகழாய்வு பணிகள், இதுவரை 400 சதுர மீட்டரில் குழிகள் அமைக்கப்பட்டு முடிவடைந்துள்ளன என்றும் அவர் கூறியுள்ளார்.