கீழடி அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

கீழடி அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்

கீழடி அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தம்
Published on

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழுமுடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளதால், கீழடியில் நடைபெற்று வந்த அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7அம் கட்ட அகழாய்வுப் பணி, கடந்த பிப்ரவரி மாதம் முதல் நடைபெற்று வந்தது. பொதுமுடக்க அறிவிப்பால் அகழாய்வுப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டுள்ள தொல்லியல்துறை அதிகாரிகள், நிலைமை சீரடைந்ததும் வழக்கம்போல் பணிகள் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனிடையே, அகழாய்வுக்காக தோண்டப்பட்ட 5 குழிகளும், தற்காலிகமாக மறைக்கப்பட்டன.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com