கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒன்றோறொன்று ஒட்டிய நிலையில் மட்கலன்கள் கண்டெடுப்பு!

கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒன்றோறொன்று ஒட்டிய நிலையில் மட்கலன்கள் கண்டெடுப்பு!

கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒன்றோறொன்று ஒட்டிய நிலையில் மட்கலன்கள் கண்டெடுப்பு!
Published on

கீழடி அகழாய்வு பணியில் இன்று மேலும் இரண்டு மட்கலன்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தமிழக தொல்லியல் துறை சார்பில் 7ம் கட்ட அகழாய்வு பணிகள் பிப்ரவரி 13 முதல் கீழடி, அகரம், கொந்தகை பகுதிகளில் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்நிலையில், கீழடியில் மொத்தம் 5 குழிகள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த அகழாய்வு பணியில் இதுவரை உழவு கருவி, சுடுமண்ணால் செய்யப்பட்ட தாயக்கட்டை, கருப்பு வண்ண பானை ஓடுகள், கருப்பு சிவப்பு வண்ண பானை ஓடுகள், சிறிய கலயம் உள்ளிட்டவை கண்டறியப்பட்டன. இந்நிலையில், கணேசன் என்பவரது ஒரு ஏக்கர் நிலத்தில் நடந்த அகழாய்வில் ஒன்றரை அடி உயரத்தில் 5 லிட்டர் கொள்ளளவு கொண்ட கலைநயம் மிக்க மூடியுடன் பானை ஒன்று கடந்த வாரம் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒரு மட்கலனை மற்றொரு மட்கலன் கொண்டு மூடி இருக்கக் கூடிய நிலையில் இரண்டு மட்கலன்கள் இன்று கண்டறியப்பட்டுள்ளது. இங்கு ஏற்கெனவே அகண்ட வாய் கிண்ணங்கள், பருகு நீர் குவளை, வட்டவடிவிலான மட்கலன்கள் அதிக அளவில் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com