\
கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒரே குழியில் கண்டறியப்பட்ட 3 உரை கிணறுகள்

கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒரே குழியில் கண்டறியப்பட்ட 3 உரை கிணறுகள்

கீழடி 7ஆம் கட்ட அகழாய்வு: ஒரே குழியில் கண்டறியப்பட்ட 3 உரை கிணறுகள்
Published on

கீழடி 7ஆம் கட்ட அகழ்வாய்வு அகரத்தில் நடைபெற்ற அகழாய்வு பணியின்போது ஒரே குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்டம் கீழடியில் 7ஆம் கட்ட அகழ்வாய்வு பணிகள் கடந்த பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 5ஆம் கட்ட அகழ்வாய்வின் தொடர்ச்சியை கண்டறியும் வகையிலும் தொன்மையான மனிதர்களின் வாழ்வியல்முறை, நம்பிக்கை, கலாச்சாரம், இன மரபியல் ஆகியவற்றை அறியும் வகையில் கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய 4 இடங்களில் விரிவான அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்நிலையில், அகரத்தில் நடைபெறும் அகழாய்வில் ஒரே குழியில் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது. 3 அடுக்கு கொண்ட ஒரு உரை கிணறும் 2 அடுக்கு கொண்ட இரு உரை கிணறும் தற்பொழுது கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் முழு வடிவத்தை வெளிக்கொணரும் பணியில் தொல்லியல் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர், ஏற்கெனவே 4 உரை கிணறு கண்டறியப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 உரை கிணறுகள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com