கீழடி அகழ்வாய்வுகள் தொய்வின்றி தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கீழடி அகழ்வாய்வுகள் தொய்வின்றி தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலின்

கீழடி அகழ்வாய்வுகள் தொய்வின்றி தொடர வேண்டும்: மு.க.ஸ்டாலின்
Published on

கீழடி அகழ்வாய்வுகள் தொய்வின்றி தொடர தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில் பேசிய ஸ்டாலின், கீழடி அகழ்வாய்வுக்கு மத்திய அரசின் ஒத்துழைப்பு போதுமானதாக இல்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து இருந்து வருவதாக தெரிவித்தார். கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களை தமிழகத்திலேயே பாதுகாத்திடும் வகையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். இதற்கு பதில் அளித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை பாதுகாக்க 72 சென்ட் நிலம் வழங்கப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 ஏக்கர் நிலம் வழங்க அரசு பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அகழ்வாய்வில் கிடைத்த பொருட்களை தமிழகத்திலேயே ஆய்வு செய்ய மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com