\
அதானி,எல்&டி நிறுவனங்களுக்கு எதிராக காட்டுப்பள்ளி மக்கள் போராட்டம் - சீமான் கண்டனம்

அதானி,எல்&டி நிறுவனங்களுக்கு எதிராக காட்டுப்பள்ளி மக்கள் போராட்டம் - சீமான் கண்டனம்

அதானி,எல்&டி நிறுவனங்களுக்கு எதிராக காட்டுப்பள்ளி மக்கள் போராட்டம் - சீமான் கண்டனம்
Published on

வேலைவாய்ப்பு வழங்காத அதானி,எல்&டி நிறுவனங்களுக்கு எதிராக காட்டுப்பள்ளி மக்கள் போராட்டத்திற்கு பந்தல் அமைக்க அனுமதிக்காத தமிழக அரசுக்கு சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

காட்டுப்பள்ளி அதானி துறைமுக விரிவாக்கம் மற்றும் L&T நிர்வாகம் வேலைவாய்ப்பு வழங்காமையைக் கண்டித்து பழவேற்காட்டை சேர்ந்த அனைத்து கிராம மக்களும் மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். நீண்ட நாட்களாக இம்மக்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத நிலையில் தமிழ்நாடு அரசு இதனைக் கவனத்தில்கொள்ள வேண்டும்.

மறியல் நடக்கும் இடத்தில் பந்தல், நாற்காலிகள் முதலியவற்றை அனுமதிக்காமல் காவல்துறை தடுத்து இருப்பதனால் பொதுமக்கள் கடும் வெயிலுக்கு மத்தியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

சனநாயகத்திற்கு எதிரான தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறையின் இப்போக்கு கடும் கண்டனத்திற்குரியது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com