புயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்கு வங்கம் சிறப்பு ரயில் ரத்து

புயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்கு வங்கம் சிறப்பு ரயில் ரத்து
புயல் எதிரொலி : காட்பாடி டூ மேற்கு வங்கம் சிறப்பு ரயில் ரத்து

இன்று காட்பாடியில் இருந்து மேற்கு வங்கம் செல்ல இருந்த பயணிகள் சிறப்பு ரயில், புயல் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

சிகிச்சைக்காக மற்றும் பல்வேறு தொழில்களுக்காக வடமாநிலங்களில் இருந்து வேலூர் வந்து, ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களை சிறப்பு ரயில் மூலம் சொந்த மாநிலம் அனுப்பும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது வரை 7 சிறப்பு ரயில்களில் சுமார் 8000-க்கும் மேற்பட்டோர் சொந்த மாநிலம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சுமார் 1300 பேரை சொந்த ஊர் அனுப்ப இன்று மதியம் 12.00 மணிக்கு காட்பாடி ரயில் நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த சிறப்பு ரயில் Amphan புயல் காரணமாக ரத்து செய்யப்படுவதாக வேலூர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாலை 4.00 மணிக்கு திட்டமிட்டப்படி பீகார் மாநிலத்திற்கு காட்பாடி இரயில் நிலையத்தில் இருந்து சிறப்பு ரயில் இயக்கப்படும் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com