\
ஆட்சியரின் அழைப்பை புறக்கணித்த கதிராமங்கலம் கிராம மக்கள்

ஆட்சியரின் அழைப்பை புறக்கணித்த கதிராமங்கலம் கிராம மக்கள்

ஆட்சியரின் அழைப்பை புறக்கணித்த கதிராமங்கலம் கிராம மக்கள்
Published on: 

அமைதி பேச்சுவார்த்தைக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்திருந்த நிலையில், அதனை கதிராமங்கலம் கிராம மக்கள் புறக்கணித்துள்ளனர். 

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்திற்கு எதிராக கதிராமங்கலம் கிராம மக்கள் 116 வது நாளாக போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பேராசிரியர் ஜெயராமன் பொதுமக்களை சந்தித்து அடுத்த போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் கிராம மக்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர திருவிடைமருதூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதிப் பேச்சுவார்த்தைக்கு மாவட்ட ஆட்சியர் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்த பேச்சுவார்த்தையை புறக்கணித்த கிராம மக்கள், மாவட்ட ஆட்சியர் தங்களை நேரடியாக சந்திக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com