கத்திபாரா நகர்ப்புற சதுக்கம்: விடுமுறையை உற்சாகமாக கொண்டாடிய பொதுமக்கள்
கத்திப்பாரா நகர்புற சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வார விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர்.
கடந்த 16 ஆம் தேதி தமிழக முதல்வர் முக.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்ட கத்திப்பாரா நகர்ப்புற சதுக்கத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வார விடுமுறையை உற்சாகமாக கொண்டாடினர்.
அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள கடைகள் இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை என்றாலும் கூட திருவிழாக்களுக்கு வரும் நடமாடும் பலூன் கடைகள் போன்ற சிறு சிறு கடைகளில் விளையாட்டு பொருட்களை வாங்கி குழந்தைகள் மகிழ்ந்தனர்.
உயிரெழுத்துக்கள் அருகே நின்று செல்பி எடுத்தும், புல்தரைகளில் குடும்பத்துடன் உணவு உண்டும் இந்த ஞாயிற்றுக் கிழமையை ஈக்காட்டுதாங்கல், சைதாப்பேட்டை, ஆலந்தூர் சுற்று வட்டார மக்களுக்கு இனிய நாளாக மாற்றியுள்ளது கத்திப்பாரா சதுக்கம்.
குப்பைத் தொட்டிகள் இல்லை என்பதால் பொதுமக்கள் ஆங்காங்கே சாப்பிட்ட பொருட்கள் மற்றும் கவர்களை வீசிச் சென்றுள்ளனர். உடனடியாக குப்பைத் தொட்டிகளை வைக்க வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

