\
கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம்! அரசு பேருந்து பலத்த சேதம்!

கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம்! அரசு பேருந்து பலத்த சேதம்!

கத்திபாரா: வழிகாட்டி பலகை விழுந்ததில் இருவருக்கு பலத்த காயம்! அரசு பேருந்து பலத்த சேதம்!
Published on

சென்னை கத்திப்பாரா அருகே சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் மீது வழிகாட்டிப்பாதை பலகை விழுந்ததில் இருவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை கத்திப்பாரா பாலம் அருகே வைக்கப்பட்டிருந்த மிகப்பெரிய வழிகாட்டுப்பலகை இரு புறமும் உள்ள கம்பங்களோடு பெயர்ந்து விழுந்தது. யாரும் எதிர்பாராத தருணத்தில் நிகழ்ந்த இந்த விபத்தால் சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருவர் படுகாயம் அடைந்தனர். இருவரும் சிகிச்சைக்காக மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மேலும் இந்த வழிகாட்டுப்பலகை விழுந்த விபத்தில் ஒரு அரசுப்பேருந்து பலத்த சேதம் அடைந்தது. இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாள் என்பதால் குறைந்தளவு போக்குவரத்தே இருந்ததால் பெரும் விபரீதங்கள் நிகழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com