தமிழ்நாடு
கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை.. தமிழக அரசு கருத்து தெரிவிக்கவில்லை
கஸ்தூரி ரங்கன் குழு அறிக்கை.. தமிழக அரசு கருத்து தெரிவிக்கவில்லை
மேற்கு தொடர்ச்சி மலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பான கஸ்தூரி ரங்கன் குழுவின் அறிக்கை குறித்து தமிழக அரசு எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேற்குத் தொடர்ச்சிமலை ஆக்கிரமிப்புகள் தொடர்பாக கஸ்தூரி ரங்கன் குழு 2013-ஆம் ஆண்டு அறிக்கை தாக்கல் செய்தது. மலைப்பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கஸ்தூரி ரங்கன் அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டது. இது தொடர்பாக 6 மாநிலங்களிடம் கருத்து கேட்கப்பட்டது. அதில், தமிழகம் மட்டும் இதுவரை கருத்துக் கூறவில்லை என மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.