மறக்குமா நெஞ்சம் விவகாரம்: “தியேட்டரில்கூட தள்ளுமுள்ளு, போலி டிக்கெட் விற்பனை இருப்பதில்ல” - கஸ்தூரி

புதிய தலைமுறையின் நேர்ப்பட பேசு நிகழ்ச்சி நேற்று, “கடும் விமர்சனத்திற்குள்ளான ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சி... அரசியலாக்கப்படுகிறதா நிர்வாகக் குளறுபடி?” எனும் தலைப்பில் நிகழ்ந்தது. அதில் நடிகை கஸ்தூரி கலந்துகொண்டு பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மார்க்சிஸ்ட் கே.கனகராஜ், வலதுசாரி நித்தியானந்தன், அரசியல் விமர்சகர் கஸ்தூரி, பூவுலகின் நண்பர்கள் வெற்றிச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், “இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காமல் இருக்க வேண்டுமென்றால் என்ன செய்ய வேண்டும்?” என்ற கேள்விக்கு கஸ்தூரி பதில் அளித்தார்.

அவர் பேசுகையில், “ஒவ்வொரு நாளும் பல ஆயிரம் கூடும் தியேட்டர்கள்ல தள்ளுமுள்ளு ஏற்படுவது கிடையாது... பெண்களுக்கு பிரச்னை வர்றதே இல்ல... அங்கெல்லாம் போலி டிக்கெட்டுகள் விற்கப்படுவதில்ல. அதுக்கெல்லாம் என்ன காரணம்? அப்போ அவங்களால கட்டுப்பாடா எல்லா விஷயத்தையும் செய்ய முடியுமென்றால், இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களாலும் முடியும். எல்லோரிடத்திலும் கவனம் தேவைப்படுகிறது. அதுதான் விஷயம்” என்பதாக பேசினார். அவர் பேசியதன் முழு விவரம் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள வீடியோவில் உள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com