தமிழ்நாடு
கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கரூர்: சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை
கரூரில் 8 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 40 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கரூரில் கடந்த 2019ஆம் ஆண்டு பள்ளிக்குச் சென்று வீடு திரும்பிய 3ஆம் வகுப்பு சிறுமியை, 40 வயதான சரவணன் என்பவர் பாலியல் வன்கொடுமை செய்தார். இதுதொடர்பான வழக்கு கரூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி நசீமா பானு, குற்றவாளிக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.