poor quality roadpt desk
தமிழ்நாடு
”என்ன கையில அப்படியே வருது..” - கரூரில் பெயரளவுக்கு போடப்பட்ட தார் சாலை; வைரலாக பரவும் வீடியோ
தரங்கம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி கிராமத்திற்கு நேற்று போடப்பட்ட தார் சாலை, கைகளால் பெயர்த்தெடுக்கும் அளவுக்கு இருந்ததால் கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கரூர் மாவட்டம் தரங்கம்பட்டியில் இருந்து வீரசிங்கம்பட்டி வரை சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு கோடியே 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க திட்டமிடப்பட்டு நேற்று சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு தார் சாலை அமைக்கப்பட்டது.
poor quality roadpt desk
இந்நிலையில் இன்று, புதிய தார் சாலையை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். தரமற்ற நிலையில் தார் சாலை போடப்பட்டுள்ளதாக வீரசிங்கம்பட்டி கிராம பொதுமக்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.