தமிழ்நாடு
கரூர்: கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழப்பு
கரூர்: கார் மோதி இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் உயிரிழப்பு
கரூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே இருவர் உயிரிழந்தனர்.
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி. காவல் சரகத்துக்கு உட்பட்ட ஜங்கால்பட்டி என்ற இடத்தில் நேற்றிரவு இருசக்கர வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது.
இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதையடுது;து அந்த சாலை வழியாகச் சென்றவர்கள் பலத்த காயமடைந்திருந்த கார் ஓட்டுநரை மீட்டு சிகிச்சைக்கு மருத்துவமனையில் சேர்த்தனர்.
இது குறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி காவல் நிலைய போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சடலங்களை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

