கரூர்: காணாமல் போன 2 சிறுவர்கள் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு

கரூர்: காணாமல் போன 2 சிறுவர்கள் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு
கரூர்: காணாமல் போன 2 சிறுவர்கள் விவசாய கிணற்றில் சடலமாக மீட்பு

கரூரில் 5 ஆம் வகுப்பு படிக்கும் 2 பள்ளி மாணவர்கள் விவசாய கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கரூர் அருகே உள்ள என்.புதூரை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது உறவினர் சக்திவேல். இருவரும் அந்த பகுதியில் உள்ள சாயப்பட்டறை ஒன்றில் பணிபுரிந்து வருகின்றனர். கோவிந்தராஜின் மகன் தங்கதுரை சக்திவேல் மகன் சுஜித் ஆகிய இருவரும் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்து சிறுவர்கள் இருவரையும் காணவில்லை. இது குறித்து பெற்றோர் வாங்கல் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்த நிலையில், இன்று என் புதூர் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் சிறுவர்கள் இருவரும் சடலமாக கிடந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலாயுதம்பாளையம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித் துறையினர் விரைந்து சென்று உடல்களை மீட்டனர். வாங்கல் காவல்நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com