நீட் தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டம் தொடரும் - உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டம் தொடரும் - உதயநிதி ஸ்டாலின்
நீட் தேர்வை ரத்து செய்யும் வரை சட்டப் போராட்டம் தொடரும் - உதயநிதி ஸ்டாலின்

நீட் தேர்வுக்காக திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து தொடர்ந்து போராடி வருகிறது நீட் தேர்வை ரத்து செய்யும் வரை போராட்டம் தொடரும் என கரூரில் தேர்தல் பரப்புரையில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு கேட்டு, கரூர் பேருந்து நிலையம் அருகே திமுக இளைஞரணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசினார். அப்போது கரூருக்கும் திமுகவுக்கும் நெருங்கிய உறவு உள்ளது. திமுக தலைவர் கருணாநிதி முதன்முதலில் குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

திமுக ஆட்சி அமைந்ததில் இருந்து தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிராக போராடி வருகிறது கவர்னர் நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்தை திருப்பி அனுப்பியதற்கு உடனடியாக நேற்று சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி அதை கவர்னருக்கு அனுப்பி உள்ளோம். நீட் தேர்வை ரத்து செய்யும் வரை திமுக ஓயாது.

திமுக ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என்று சொன்ன வாக்குறுதியை காப்பாற்றுகிறார். அதிமுக ஆட்சி போல அடிமை ஆட்சி அல்ல இந்த ஆட்சி, மக்களுக்கான ஆட்சி, சமூக நீதிக்கான ஆட்சி. கலைஞர் வழிவந்த மு.க. ஸ்டாலின் ஆட்சி. நீட் தேர்வை ரத்து செய்யும் வரை எல்லா விதமான சட்ட போராட்டங்களையும் நடத்துவோம் என்று பேசினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com