\
காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச் சிறுமி.. இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்

காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச் சிறுமி.. இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்

காதலனுக்காக வீட்டை விட்டு வெளியேறிய பள்ளிச் சிறுமி.. இறுதியில் நிகழ்ந்த பரிதாபம்
Published on: 

கரூரில் காதலுக்காக வீட்டை விட்டு வெளியேறிய சிறுமியை போலீசார் சிவகங்கையில் மீட்டனர்.

கரூர் வேலாயுதம் பாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவருக்கு 16 வயதில் மகள் உள்ளார். அந்த சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த இரும்பு கடையில் பணியாற்றும் ஸ்டார்வின் (22) என்ற இளைஞருக்கும் காதல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து பெற்றோருக்கு தெரியவந்தததை அடுத்து சிறுமியை கண்டித்துள்ளனர். இதனால் சிறுமி நேற்று முன்தினம் வீட்டை விட்டு வெளியேறி ஸ்டார்வினை சந்தித்துள்ளார். அப்போது, ஸ்டார்வின் சிறுமியை ஜான் என்ற தனது நண்பர் மூலம், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டிக்கு அனுப்பி வைத்ததாக தெரிகிறது.

ஆனால், அங்கு ஜான் குடும்பத்தினர் கண்டித்ததால் சிறுமியை நேற்று மாலை வீட்டிற்கு அனுப்பி வைக்க முடிவு செய்து, சிவகங்கை செல்லும் பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து ஸ்டார்வின் தகவலின்பேரில் அவரது அண்ணன் ராஜ்குமார் மற்றும் சக நண்பர்கள் சிறுமியை அழைத்து செல்ல நேற்றிரவு சிவகங்கை பேருந்து நிலையம் வந்துள்ளனர்.

அப்போது, ரோந்து வந்த போலீஸார் சிறுமியுடன் இருந்த நபர்களை பார்த்து சந்தேகமடைந்தனர். அவர்களிடம் விசாரணை நடத்தியதில், சிறுமி வீட்டை விட்டு வெளியேறியது தெரிய வந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் உத்தரவின் பேரில் மீட்கப்பட்ட சிறுமி மற்றும் 5 இளைஞர்கள் கரூர் வேலாயுதம்பாளையம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com