சுர்ஜித் குடும்பத்துடனும், களத்திலும் தொடர்ந்து இருக்கும் ஜோதிமணி

சுர்ஜித் குடும்பத்துடனும், களத்திலும் தொடர்ந்து இருக்கும் ஜோதிமணி
சுர்ஜித் குடும்பத்துடனும், களத்திலும் தொடர்ந்து இருக்கும் ஜோதிமணி

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தை சுர்ஜித்தை மீட்கும் களத்தில் கரூர் எம்பி ஜோதிமணி நேற்று முதல் இருந்து வருகிறார்.

திருச்சி மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில் 2 வயது குழந்தை சுர்ஜித் கடந்த வெள்ளிக்கிழமை மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தது. குழந்தையை மீட்கும் பணிகள் அன்று மாலை முதலே தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. ஆனால் இதுவரையிலும் குழந்தையை மீட்க முடியவில்லை. பல்வேறு மீட்புக்குழுவினர் முயற்சித்தும் முடியவில்லை. இதற்கிடையே குழந்தை 26 அடியில் சிக்கியிருந்த குழந்தை, 88 அடிக்கு கீழே இறங்கியுள்ளது. சுர்ஜித்திற்காக தமிழகம் முழுவதும் பலரும் பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்.

குழந்தையை மீட்க ரிக் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு தோண்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதல் ரிக் இயந்திரம் தோண்டும் பணியில் தொய்வு ஏற்பட்டதால், இரண்டாவதாக ராமநாதபுரத்தில் இருந்து அதிநவீன ரிக் இயந்திரம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதை தோண்டுவதற்காக பொறுத்தும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. குழந்தையை மீட்கும் இடத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் உள்ளிட்டோர் தொடர்ந்து களத்தில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்துதுறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வருகை தந்துள்ளார். 

இதற்கிடையே நேற்று சுர்ஜித் குடும்பத்தை எம்.பி ஜோதிமணி நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அத்துடன் மீட்புப்பணிகளையும் பார்வையிட்டார். பின்னர் பேசிய அவர், “கனத்த இதயத்துடன் நின்று கொண்டு இருக்கிறோம். குழந்தையை மட்டும் மீட்டுக்கொடுத்துவிடுங்கள் என பெற்றோர் கண்ணீர் மல்க கூறினர். எப்படியும் குழந்தையை மீட்டு தருவார்கள் என நம்பிக்கை இருக்கிறது.

ஒவ்வொரு நிகழ்வுகளையும் கடந்து செல்வதால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விடுகிறது. தொழில் நுட்பத்தில் முன்னேறிய நாடாக இருந்தாலும், குழந்தையை மீட்க போராடுவது வேதனை அளிக்கிறது. ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பிரத்யேக கருவியை வடிவமைக்க மக்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வருவோம்” என தெரிவித்திருந்தார். இவ்வாறு கூறிய இவர், தற்போது வரையிலும் அங்கு களத்தில் இருந்து வருகிறார். அத்துடன் சுர்ஜித் குடும்பத்தினருக்கும், தாயாருக்கும் தொடர்ந்து ஆறுதல் கூறி வருகிறார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com