கடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை

கடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை
கடல்போல் காட்சியளிக்கும் மாயனூர் அணை

மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிடப்பட்டுள்ள தண்ணீரால் முக்கொம்பு மற்றும் மாயனூர் தடுப்பணைகள் கடல் போல் காட்சியளிக்கின்றன. 

பரந்து விரிந்து காட்சிக்கும் மாயனூர் கதவணை கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஆயிரத்து 230 மீட்டர் அகலம் கொண்ட இந்தக் கதவணையில் 98 மதகுகள் உள்ளன. கரூர் மாவட்டத்திலுள்ள 22ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் இந்தக் கதவணையில் தேக்கி வைக்கப்படும் தண்ணீர் மூலம் பாசன வசதி பெறுகின்றன. மாயனூர் கதவணைக்கு இரவுக்குள் நீர்வரத்து ஒருலட்சம் கன அடியாக அதிகரிக்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.

காவிரி நீரால் கடல் போல் காட்சியளிக்கிறது முக்கொம்பு தடுப்பணை. டெல்டா பாசனத்திற்காக தண்ணீரை பிரித்து அனுப்பும் இடமாகவுள்ளது. முக்கொம்பு தடுப்பணையிலிருந்தே கொள்ளிடத்தில் திறக்கப்படும் தண்ணீரே தஞ்சை, திருவாரூர் மற்றும் கடைமடை பகுதி விளைநிலங்களை செழிப்படைய செய்கிறது.

முக்கொம்பு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பதால், சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கொள்ளிடம் ஆற்றிலும் தண்ணீர் திறக்கப்படுவதால் அம்மா மண்டபம், கம்பரசம்பேட்டை தடுப்பணை, சிந்தாமணி படித்துறை உள்ளிட்ட இடங்களில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com