கரூர்: ‘மயானத்திற்குச் செல்ல பாதை இல்ல...’ வயலில் சடலத்தை தூக்கிச் சென்ற அவலம்! அதிகாரிகள் பதிலென்ன?

குளித்தலை அருகே இறந்தவரின் சடலத்தை மயானத்திற்கு கொண்டுசெல்ல வழியில்லாததால் விவசாய நெல்பயிர் வயலில் தூக்கிச் சென்றுள்ளனர் கிராம மக்கள்.
agri field
agri fieldpt desk

கரூர் மாவட்டம், குளித்தலை அருகே கிருஷ்ணராயபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்புத்தூர் ஊராட்சி புதுப்பட்டியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியை சேர்ந்த மருதாம்பாள் என்பவர் உடல்நிலை சரியில்லாமல் மரணமடைந்துள்ளார். அப்போது அவரது சடலத்தை மயானத்திற்கு கொண்டுசெல்ல வழியில்லாததால் விவசாய நெல்பயிர் வயலில் இறங்கி சடலத்தை உறவினர்கள் தூக்கிச் சென்றுள்ளனர்.

agri land
agri landpt desk

மயானத்திற்குச் செல்ல பாதை கேட்டு பலமுறை கோரிக்கை வைத்தும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம்சாட்டும் கிராம மக்கள், உடனடியாக நடவடிக்கை எடுத்து மயானத்திற்கு செல்ல பாதை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

இது குறித்து கருப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ரெங்கம்மாளிடம் கேட்டதற்கு... “இட உரிமையாளரிடம் பேசி உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறினார். இதையடுத்து கிருஷ்ணராயபுரம் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) சரவணனிடம் கேட்ட போது, “மக்களின் குறைகள் குறித்து விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com