சேவல் காலில் கத்தி கட்டி நடந்த சண்டை : இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

சேவல் காலில் கத்தி கட்டி நடந்த சண்டை : இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்

சேவல் காலில் கத்தி கட்டி நடந்த சண்டை : இளைஞருக்கு நேர்ந்த விபரீதம்
Published on

கரூரில் அனுமதியின்றி நடத்தப்பட்ட சேவல் சண்டையில், சேவல் காலில் கட்டப்பட்டிருந்த கத்தி குத்தியதில் 30 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கரூர் மாவட்டம் க.பரமத்தி அடுத்துள்ள நாலுகால்குட்டை பகுதியில் அனுமதியின்றி சேவல் சண்டை நடந்துள்ளது. இதில் 50-க்கும் அதிகமான நபர்கள் கலந்து கொண்டுள்ளனர். அப்போது. சேவல்களின் காலில் கத்தி கட்டி சண்டையிட வைத்துள்ளனர். இதில் ஒரு சேவல் காலில் கட்டி இருந்த கத்தி, எதிர்பாராதவிதமாக குத்தியதில் நெடுங்கூரைச் சேர்ந்த முருகேசன் என்ற 30 வயது இளைஞரின் வலது தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால், ரத்தம் அதிக அளவு வெளியேறி உயிருக்கு போராடியுள்ளார். இதையடுத்து, தகவல் அறிந்த க.பரமத்தி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து முருகேசனை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கெனவே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.


கூர்மையான கத்தி தொடை நரம்பில் குத்தியதால் இரத்தம் அதிக அளவு வெளியேறி உயிரிழந்து விட்டதாக மருத்துவர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட 5 பேரை போலீசார் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டம் பரமத்தி, சின்னத்தாராபுரம் போன்ற பகுதிகளில் தடையை மீறி சேவல் சண்டை, சூதாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், இது போன்று அசம்பாவிதம் நடந்தால் மட்டுமே வெளியே தெரியும். இல்லையென்றால் ரகசியமாக முடித்துக் கொள்வார்கள் எனவும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com